கவலை
வாழ்க்கையில
சந்தோஷம்
ஜலதோஷம் மாதிரி இல்ல,
வந்துட்டு சட்டுன்னு போயிடும்,
ஆனா கவலைங்கிறது
சின்ன ஜலதோஷம் மாதிரி தான் வரும்,
தைரியம் இல்லைன்னா
காய்ச்சல் வந்து டாக்டர்கிட்ட கூட்டிட்டுப்போகும்.
ஒரு உதவி செய்ற யாருமே
கவலைன்கிற நோயத்தீர்க்கிற
டாக்டர் தானே.
ஆனா எல்லா கவலைக்கும்
உடனே மருந்து கிடைக்கிறது இல்ல தான்,
சில நேரம் ஒரு கவலைக்கு
இன்னொரு கவலை மருந்தாயிடும்,
இல்ல மரத்துப்போயிடும்
நமக்கு தெரியாமலே.
அடுக்கடுக்கா
கவலைகள் வருவதும்
ஒரு வகையில் நல்லது..
முதல்ல வர்ற கவலை
தானாக மறந்து
மறைந்து போய்டுது இல்ல?
ஒரு குழந்தையோட கவலை தீரும்போது
அது வளர்ச்சி, ஒரு அனுபவம், ஒரு படிப்பினை.
ஒரு இளைஞனோட கவலை தீரும் போது
அது முதிர்ச்சி, ஒரு உற்சாகம், ஒரு பிணைப்பு.
ஒரு மனிதனின் கவலை தீரும் போது
ஒரு மகிழ்ச்சி, ஒரு தெளிவு, ஒரு திருப்தி.
கவலை இல்லைனா
மனுஷன் ஜஸ்ட் ஒரு ரோபோட்,
மனுசி ஒரு பொம்மை.
அவ்வளவு தான்.!