எனக்காக சில நிமிடம்........

கவிஞர்களே!
நான் இந்நாள் வரை
மறைத்து வைத்திருந்த
என் வாழ்க்கைப் பக்கங்களின்
ஒளிவுகள் இவை...!

என்னைப் பாதித்த
என் வாழ்வின்
நெளிவு சுழிவுகள்....!


இவை
வெறும் எழுத்துகள் அல்ல
என் உணர்வின்
பிழிவுகள்....!

உங்கள் மன ஓட்டத்தை போல
ஒரே இருப்பில்
ஓரே மூச்சில் இருந்து
படித்து முடித்து விடாதீர்கள்....!

ஒவ்வொரு கவிதைகளையும்
நின்று நிதானித்து
வாசியுங்கள்- யோசியுங்கள்....!

ஒவ்வொரு வரிகளிலும்
சற்று ஓய்வெடுங்கள்....!

அப்போதுதான்
கவிதைகளின் கனம் புரியும்
வாழ்க்கையின்
அழகுகளும் அசிங்கங்களும் தெரியும்.....!

தணியாத அன்புடன் சிறோஜன் பிருந்தா......

எழுதியவர் : சி.பிருந்தா (22-Aug-16, 1:02 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 87

மேலே