சமரசச் சர்ச்சை
தூங்காத சில
நினைவுகள்
தாங்காத தவிப்பை
தருகின்றன....
மறக்கப்பட்ட
பழைய ஞாபகம் ஒன்று
திறக்கப்பட்ட
என் மனவீட்டில்
வந்து அமர்கிறது...
சமரசம் சடங்குகளில் மட்டும் என
தவறாக அர்த்தப்படுத்தியவர்கள்
சவக் குழிகளிலும்
சுடுகாடுகளிலும்
சாதி வேலி
போடுகின்றார்...
ஒரு யுகத்துப்
பழக்க தோஷம்
சில ஆண்டுகளில்
சீர்பெறுமா என்ன?
நிர்வாணக் கூட்டத்திடையே
ஆடை கட்டியவனே
பைத்தியக்கான்....
மானிடம் தோற்றுப்போன
இந்த மண்ணில்
சமரசம் பற்றி சர்ச்சை செய்வர்
கேலிக்குரியவர் தானே?