என் பிறப்பு தவறா

வறுமையால் என்னை
மற்றவர்க்கு வட்டியாய்
அளித்த என் தாய் தந்தையே
அவர்கள் நல்லோர்
என்று அறிந்துதான்
என்னை விற்றாயா?
இன்று நான்
பாசமின்றி நேசமின்றி
தெருவீதியில் பிச்சை எடுக்கிறேன்
என்னை சீராட்டி
பராமரிக்க வேண்டிய
உன் கரங்கள் எங்குத் தாயே ?
உன் கைகோர்த்து
வீதி எங்கும் திரிய வேண்டிய
என் கைகள்
முடமாக்கப்பட்டு தெருவீதிகளில்
கையேந்தி பிச்சை எடுக்கிறேன் -தந்தையே
உன் தாலாட்டை
ரசித்து உறங்க வேண்டிய
என் செவிகள்
தெருநாய்களின் ஊளையிடை
கேட்டு உறங்குகிறது -தாயே
உன்னுள் பிறந்தது
என் தவறா ? தாயே
இல்லை உன்னால் பிறந்தது
என் தவறா ?தந்தையே

எழுதியவர் : கௌசல்யா .ஞா (24-Aug-16, 12:37 am)
பார்வை : 108

மேலே