வானமே எல்லை என எண்ணி வாழ்வினை ருசிப்போம் வாருங்களேன்

வாருங்கள் வாருங்கள் தோழர்களே
வாழ்வினை ரசிப்போம் தோழர்களே
வானமே எல்லை என எண்ணி
வாழ்வினை ருசிப்போம் வாருங்களேன்


வாழ்வினை தொலைக்கும் போதையை தவிர்த்தே
வாலிப வாசலில் வசந்தத்தைக்காண்போம்
வலிகளைக்கொடுக்கும் போதையின் பாதையில்
போவதை தவிர்த்தே புதுமைகள் செய்வோம்


மனிதனை கொல்லும் மிருகமே போதை
மரணத்தை வலிந்து அழைக்குமே நாளை
பேதையை தனிமையில் தள்ளுமே போதை
உன் வரலாற்றை தின்று அழிக்குமே போதை


இருப்பதை உறிஞ்சி இரவலன் ஆக்குமே
இளமையை விழுங்கி முதுமையைக்காட்டுமே
கூரையில் தீயாய் கொழுந்துவிட்டெரியுமே
குலமகள் வாழ்வதை குலைத்துத்தான் சிரிக்குமே
கூடாப்போதை கேடுகள் தருமே
குலத்தின் பெருமையை கொன்றுதான் சிரிக்குமே


கேடுகள் தருகின்ற போதையும் வேண்டாம்
துன்பத்தில் துயருறும் நிலமையும் வேண்டாம்
சிந்தனை செய்து நாம் சீர்வழி நடப்போம்
சீரியவழிதனில் வாழ்வினை ருசிப்போம்


வாருங்கள் வாருங்கள் தோழர்களே
வாழ்வினை ரசிப்போம் தோழர்களே
வானமே எல்லை என எண்ணி
வாழ்வினை ருசிப்போம் வாருங்களேன்

எழுதியவர் : வினோ சர்மிலா (24-Aug-16, 10:57 am)
பார்வை : 116

மேலே