பருவம்

பருவம்
*======*

பருவமோ
பதினெட்டு

பார்ப்பவர்கள்
எனை
தொட்டு

கட்டில் மேலே
கட்டிக்கொண்டு
முல்லைச் செண்டு
அள்ளிக்கொண்டு

விழி போகும் பல திக்கு

வெறுப்பும் சலிப்பும் கொண்டு

பள்ளியறை சென்றேன்
செண்டு


அடடா அடடா அடடா
எனக்கு ஏன் இந்த வேடம்
இறைவா இறைவா இறைவா
இது தான்
இது தான்
உன் மானுடமா?!

நான் ஏன் தான் பெண்ணாய் பிறந்தேனோ???????
என் உடலை பார்க்கும்
உயிர்கள்
உள்ளத்தை பார்ப்பதில்லையே!

மார்பை தொடும் மனிதம்
என் மனதை அறியவில்லையே!

அங்கம் தங்கம் தான்
கைகள் முல்லை தான்
கால்கள் மயில்கள் தான்
விழியோ வேல்விழி தான்
ஆனால் என்னைத் தான்
பெண்ணாய் யாரும் தான்
பார்ப்பதில்லை தான்
பார்ப்பதில்லை தான்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (24-Aug-16, 7:34 am)
Tanglish : paruvam
பார்வை : 130

மேலே