தோழி

பட்டுப் புழு ஒன்று
என் பட்டாடையில்
ஒட்டி இருந்தது கண்டு
பக்கத்தில் இருந்தவர்கள்
பறந்து விட்டனர்..!
பட பட வென இதயம் துடிக்க
ஒரு நிமிடம் பயந்து போய் நின்றிருந்தேன்.
நானிருக்கிறேன்..!
ஒன்றுமில்லை என்று
என் அருகில் வந்து அகற்றிவிட்டாள்..!
அன்று முதல் நான் அகலவில்லை
அவளை விட்டு..!
ஆம்! அவளே என் ஆருயிா் தோழி!
என் நன்றிகள் அப்புழுவிர்க்கே!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (24-Aug-16, 5:25 pm)
Tanglish : thozhi
பார்வை : 793

மேலே