நிலநடுக்கம்

பள்ளிப் பிள்ளைகள் பசி வேளையிலே - உணவு
பெட்டி உருட்டுவார் வயதின் சேட்டையிலே
அச்சிறியர் திருந்திடவே
ஆசிரியர் கண்டிப்பார்

அவ்வளவு வளர்ந்தும் - மூளை
இவ்வளவு சிறிதோ!
எவ்வளவு பசியோ உனக்கு?

தட்டை உருட்டிவிட்டாய்
எம்மை விழுங்கிவிட்டாய் - பூமியே
உம்மை கண்டிப்பார் எவரோ?

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (24-Aug-16, 11:40 pm)
Tanglish : nilanadukkam
பார்வை : 131

மேலே