நேசி

இயற்கையை விரும்பு
உனக்கு அளித்திடும் கரும்பு
தீ வைத்து நீ திரும்பு
அது கடித்திடும் எறும்பு

மரங்களை வளர்ப்பாய்
சுவாசத்தின் தூய்மையைக் காப்பாய்
மரங்களை வெட்ட‌
இயற்கைத் தேளெனக் கொட்டும்

சுற்றுச்சூழல் கெடுக்க‌
பல வழிமுறை கொண்டோம்
பசுமையைக் காக்க‌
சிறு செடியேனும் வைப்போம்

குளம்குட்டை அழித்தோம்
வயல்வெளி விற்றோம்
பின்வரும்குலத்தை மறந்துவிட்டோம்
வஞ்சனை அவர்க்கு செய்துவிட்டோம்

நீரினைக் கெடுத்தோம்
பல கழிவுகள் கலந்தோம்
நோய்களை வளர்க்க‌
தினம்நூறு ஆராய்ச்சி செய்தோம்

எங்கெங்கும் மாசு
மனிதன் மனமெங்கும் தூசு
இயற்கையை நேசி
அதை மட்டுமுன் கவிதையில் பேசி..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (25-Aug-16, 8:47 am)
Tanglish : nesi
பார்வை : 301

மேலே