இரண்டாம் கனி

மா பலா வாழையென்றே
சொல்லி வைத்த தமிழ்மரபால்
இரண்டாம் கனி ஆகிவிட்ட
மிகுந்த சுவை கொண்டவளே...

வெளியில் கரடுமுரடாய் காட்சிதரும் நீ
உள்ளே இனிக்கும் முகமாய் தானிருப்பாய்
குடும்பமாய் சேர்ந்திருப்பாய்
பெரிய இதயம் கொண்டிருப்பாய்..

மரத்தின் உச்சி நீயிருந்தால்
கீழே விழுந்தால் பலிவருமென‌
மரத்தின் கீழே உனைவைத்த‌
இறைவன் ஞானத்தை என்சொல்வது?

பலவித வடிவம் உனக்குண்டு
ஒரே நிறம்மட்டும் உன்சொந்தம்
வடக்கு பக்கம் நீ பழுக்கும்முன்னே
அப்படியே சமைத்து உண்ணுவரே..

எல்லோருக்கும் மிகப் பிடிக்கும்
குண்டுப் பழமும் நீ தானோ
உலக வடிவம் கொண்டவளே
உலகை வசியம் செய்தவளே..

உந்தன் சுவையும் இனிப்பாகும்
உந்தன் மணமும் இனிப்பாகும்
உந்தன் பேரைச் சொல்லிவரும்
பாடல் அனைத்தும் சுவையாகும்..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (25-Aug-16, 9:09 am)
Tanglish : irandaam kani
பார்வை : 77

மேலே