கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்
கார் மேகக் கண்ணன் பிறந்தானடி துன்பம் இனி நமக்கேதடி.....
மாடு மேய்க்கும் சிறுவனடி
அவன்
கன்னியர்களை ஏய்த்து விளையாடும்
சில்மிஷக்காரனடி..........
வெண்ணைகளை
திருடிடுவானடி
வெள்ளை உள்ளம் கொண்டவனடி...
இடையரில் வளந்தானடி
பல
இடையூறுகளை அழிபானடி....
உபதேசம் சொல்வானடி
குழந்தையில்
ஊர் வம்பையும் இழுப்பானடி.....
குழல் ஊதும் கண்ணனடி
அவன்
குறும்புகள் செய்யும் குழந்தையடி......
பாமா ருக்மணி கணவனடி
அவன்
உலகை ஆழும் பரந்தாமனடி.......
கம்சனை கொன்ற கண்ணனடி
அவன்
நம் மனதை களவாடும் கள்வனடி........
பாண்டவர்களின் தூதுவனடி
அவன்
இந்த
பார்'யை காக்க உதித்தவனடி....
கீதை சொன்ன கண்ணனடி
அவன்
ராதையின் காதலனடி........
ஆயர்பாடி கண்ணனடி
அவனை
அனுதினமும் தொழுவோமடி......
குழந்தையுள்ளம் கொண்டவனடி
நம்
குலம் செழிக்க செய்வானடி......
குழந்தை வடிவில் கண்ணனடி
பிஞ்சு
பாதம் பதித்து அழைப்போமடி........
குறையேதுமில்லையடி
அவன்
நம்
குழந்தை வடிவில் வந்தானடி......
பாமாலைகள் பாடி வணங்குவோமடி
பல
மாலைகள் சூடி
வேண்டுவோமடி......
நம்
மனதிலும்
வீட்டிலும்
குடிக்கொண்டானடி
துயரம் இனி
நமக்கேதடி......