பாகனின் குழந்தை
![](https://eluthu.com/images/loading.gif)
உருவத்தில் பெரிதாய் இருக்கும் ஆனையே...
உள்ளிருக்கும் மூளையும் உனக்குப் பெரியதே...
மதம் கொண்டு நீ அலைந்தாலும்
மதம் என்பது உன்னிடத்தில் இல்லையே......
பாசத்தோடு உன்னை வளர்த்தப் பாகனோ?...
உனது நிழலில் உறங்கிக் கொண்டிருக்க
வேடிக்கைப் பார்க்கும் உறவுக ளெல்லாம்
வியப்பிலும் பயத்திலும் மூழ்கி நின்றனரே......
பாசத்தின் அருமை உனக்குத் தெரியும்...
வேசமிடும் ஆறறிவு உயிர்களுக்குத் தெரியாது...
மோசமான மானுட உலகில்
அன்பிற்கு கட்டுண்டப் பாகனின் குழந்தை நீ......