பெண்ணின் விழிகள் பேசும் மொழிகள்
அவள் விழிகளின் பார்வையில்
அர்த்தங்கள் ஆயிரம் ஆயிரம்
தீயோனை சுட்டெரிக்கும்
கூர்வேல் பார்வை -அவள்
மனதில் வந்தமர்ந்த காதலன் எனக்கு
அந்த பார்வையில் தெரிவதோ
ஆசை ,நேசம்
முத்துக்கு அதரங்கள் என்பர்
என்னவள் விழிகளில் நான்
மது ஏந்தும் முத்துக்கள் சிந்தும்
இன்ப பார்வைக் கண்டேன்
வாய்தான் பேசவும் பாடவும் என்றால்
அவள் விழிகளில் பாட்டும் பரதமும் கண்டேன்
என்னைப் பார்த்து, தலை கீழ் நோக்க
அவள் தரையில் வண்ண கோலம்
வரையும் போது அவள் பார்வையில்
பெண்ணின் நாணம் பேசுது
அச்சச்சோ எத்தனை மொழிகள் பேசும்
ஒரு பெண்ணின் இரு விழிகள்
பெண் இனம் படைப்பின் அதிசயம்

