உனக்காகத்தானே

முன்னே போற மீசக்காரா...
அத்த மகன் ஆசைக்காரா..
என்னைக் கொஞ்சம் பாத்துப்போனா.. நல்லது
இல்லேனா.. கண்ணு ரெண்டும் குத்திடுவேன்... வந்திடு..

போடி போடி சிஞ்சினுக்கி..
லொள்ளு பண்ணும் மினுமினுக்கி..
உன்னையெல்லாம் எவனிங்கு கொஞ்சுவான்... என்னா..
உன்னைய.. தெரியாமா பாத்தாபய அஞ்சுவான்.. போயிடு..

தெத்துப்பல்லு மூஞ்சியப்பார்..
கோணாலான நடயத்தான்பார்..
உன்னப்பாத்தா கன்னிப்பொண்ணுங்க சிரிக்குது... என்னா..
எங்கிட்டு உன்னைய போட்டுக்குடுக்குது... போடா குப்பா...

மயில்போன்ற கொரலுக்காரி...
குயில்போன்ற நெறத்துக்காரி...
வாரேன் வாரேன்... மூணுமுடிச்சு போடத்தான்...
அப்ப.. வாயமூடி ஆயிடுவ நீ பொண்ணாத்தான்....

என்னச்சொன்ன என்மச்சானே...
சொன்னவார்த்த திரும்பச்சொல்லு..
அந்த நல்ல நாளுக்குத்தான் நான் காத்திருக்கேன்..
மச்சான்.. உனக்காகத்தானே பூவா பூத்திருக்கேன்...

வேலையேதும் செய்யாமலே
என்னை கேலிசெய்யும் வேலைசெஞ்சே
எம்மனச முழுசாத்தான் தின்னுப்புட்டே...
அடியே.. ஒஞ்சிரிப்பால் என்னை என்றோ கொன்னுப்புட்டே...

லால லால லாலா லாலா
லால லால லாலா லாலா
டண்டனக்கா டண்டனக்கா டனக்கா..
டனக்கு.. டண்ட டண்ட டண்ட டண்ட டனக்கா... 

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (25-Aug-16, 1:55 pm)
பார்வை : 78

மேலே