பயணக் காதல்

பயணக் காதல்:
பயணத்தின் போது நான் பார்த்தேன் பல விழி
அதில் அவள் கொடுத்ததோ உயிர் வழி
அவள் படியில் ஏறும் முதல் நொடி
எனக்கோ மின்னலடி
இரண்டாம் நொடி வேகம் கூட்டுதடி
மூன்றாம் நொடி நெஞ்சம் வழிக்குதடி
நான்காம் நொடி காதலை அடைந்தேனடி
வழிகேட்டு விழி கொண்ட பார்வை
என்னை பார்த்தது
அடங்க காளையாக இருந்தேன் என் அருகில் அமர்ந்தால்
அவளை பார்த்த பின் நான் அமைதி கொண்டேன்
அப்பயணம் முடியும் வரை அல்ல
ஆயுல் முடியும் வரை பயணிக்க அன்பே…

எழுதியவர் : சண்முகவேல் (25-Aug-16, 1:41 pm)
பார்வை : 93

மேலே