நினைக்கத் தோண்றும்

அந்த கடலலைகள்

கடற்கரையை தழுவுகிறது

காதலி நினைவில் வரக்கூடும்

காலடி சுவடுகளை கரைத்தபோது

ஏன் இந்த காதல் வடுக்கள் மட்டும்

காலூன்றுகிறது

என நினைக்கத் தோன்றும்

அந்த அலைகள்

கடலுக்குள் சென்று மறைந்தபோது

பிரிந்த அந்த காதல்

மீண்டும் திரும்பக் கூடும்

எழுதியவர் : கே . எஸ் .கோனேஸ்வரன் (25-Aug-16, 6:13 pm)
பார்வை : 88

மேலே