யாருக்கு சுதந்திரம்
யாருக்கு சுதந்திரம்!
யாருக்கு சுதந்திரம் - எத்தனை
பேருக்கு சுதந்திரம் - இந்த
ஊருக்கே சுதந்திரமா? - இல்லை
பேருக்கு சுதந்திரமா?
இலவசமாய் அரிசி வாங்கி - அதை
சமைக்க இருபது ரூபாய்க்கு
தண்ணீர் வாங்கும் - நம்
இன தமிழனுக்கு சுதந்திரமா?
பத்து ரூபாய்க்கு பயிர் செய்து
பாதியை கூலியில் விட்டு
மீதியை சந்தையில் விட்ட
நாதியற்ற உழவனுக்கு சுதந்திரமா??
முதல் தரமானவற்றை ஏற்றுமதி செய்து
மூன்றாம் தர உணவுப் பொருளுக்கே
மூச்சை திணரடிக்கும் விலையேற்றம் கண்டு
முடங்கிப்போன மரவனுக்கு சுதந்திரமா??
ஏதேன் போன்ற தமிழகத்தில்
மீதேன் திட்டத்தை கொண்டு வந்து
நன்செய் நிலத்தடியில் கூட
நஞ்சை கலந்தபின் நமக்கேது சுதந்திரம்??