இயல்பைத் தேடி

இயல்பைத் தேடி!!!

மருத்துவம்
பொறியியல்
கலை, அறிவியலென
எத்தனை எத்தனை
பட்டங்கள்???!!!

அத்தனையும் பறப்பது
ஒரே கார்ப்பரேட் வானில்தானே???

வருமான வலை விரித்து
கௌரவ போதைத்கு அடிமையாக்கி
வசதிக்கும் ஆடம்பரத்திற்கும் அடிபணிந்து கடனாளியாகி வியாதியுற்று
பாவத்தில் பங்களித்து
இயற்கைக்கு மாறாய் வழிநடத்தும்
இந்த போலி வானில் பறப்பக்கத்தான் படித்தோமா??

உரிமைகள் இழந்து
கலாச்சாரம் இழந்து
மெத்த படித்த அடிமைகளாய்
வாழத்தான் கற்றோமா!!!

அறியாமையில் முன்னோர்கள்
அடிமையாய் இருந்தினரே!
இன்று கற்றும் நாம் விலையுயர்ந்த
அடிமையாய் இருக்கிறோமே!!!

கல்வி
பொருள் ஈட்ட அல்ல!!
சிந்தை பெருக்க!!
சரித்திரம் படைக்க!!

கற்போம் கற்பிப்போம்
இயற்கையோடு இயல்பாய் வாழ!!!

எழுதியவர் : ரெட் சூரியா (25-Aug-16, 8:50 pm)
பார்வை : 81

மேலே