நண்பா நம் வீட்டிற்கு வா

நண்பா ! நம் வீட்டிற்கு வா !

உன்னை வளர்த்த நாட்டில் வாழாமல்
பிறர் வளர்த்த நாட்டில் வாழ்கிறாய் ....

உன் வேலை இங்கு உள்ளது
வளரும் நாட்டில் வாழ்ந்து
அதை வளர்த்து விடாமல்
வளர்ந்த நாட்டில் வாழ்ந்து
என்ன பயன் கண்டாய்...........

பயமில்லாமல்
சுதந்திர பறவையாய் திரிந்த நாட்டை விட்டு
பறவை கண்டாலே சுடும் நாட்டில் வாழ்ந்து
என்ன பயன் கண்டாய்.....

இங்கு
ஒடி ஒடி விளையாடிய நாட்டை விட்டு
ஒடி ஒடி ஒழியும் நாட்டில் வாழ்ந்து
என்ன பயன் கண்டாய்.....

நீ
படிப்பதற்கு சலுகை வேண்டும்
நன்றாக படித்ததால் பதக்கம் வேண்டும்
என்று
கேட்ட நீ
வாழ்வதற்கு மட்டும் வளர்ந்த நாடு வேண்டும்
என்கிறாய்.

நீ
வாழ்வதற்கு நல்ல வாழ்வு கேட்டிருந்தால்
அதுவும் கொடுக்கும் உனக்காக..........

அறிவு தந்த நாட்டில் அறிவை காட்டாமல்
ஒழிந்து இருக்கிறாய்...........
உன்னை வாழ ஆசிர்வதித்த தெய்வங்கள் இங்கு இருக்க
பணிவிடை செய்யமால் பதுங்கி இருக்கிறாய்...........
திறமை இருந்தால் இங்கு வா....

வாழலாம்...... வாழ்த்தலாம்.........
- ஜ.கு.பாலாஜி.

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி. (25-Aug-16, 9:20 pm)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 82

சிறந்த கவிதைகள்

மேலே