நடமாடும் பிணங்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
நடமாடும் பிணங்கள்
மனிதம் மறந்த மருத்துவர்களே
இதயம் இழந்த செவிலியர்களே
பணப்பேய் பிடித்த உழியர்களே
பாதையோரம் பார்த்து நின்ற
வேடிக்கை மனிதர்களே
பக்கத்தில் பெண் குழந்தையுடன்
பத்து மைல்கள் கால் நடையாய்
அவன் தோளில் சுமந்துகொண்டு சென்ற போது
பிணமாய் இருந்தது
அவனது மனைவி மட்டுமல்ல
நீங்கள் அனைவரும்தான்
செய்தி: ஆம்புலன்சுக்கு பணம் செலுத்த முடியாத காரணத்தினால் பத்து மைல்கள் மனைவியின் சடலத்தை தோளில் சுமந்த மனிதர். பெண் குழந்தையும் கூடவே நடந்து சென்ற பரிதாபம்