நான் ரொம்ப நல்லவன்

நான் ரொம்ப நல்லவன்
======================
நல்லவன் நான் நல்லவன்
என்னாளும் நான் நல்லவன்
எப்பொழுதும் நான் நல்லவன்
கல் கொண்டு எறிந்தாலும்
பழம் தரும் நல்லவன்
ஒரு கன்னத்தை அறைந்தால்
மறு கன்னத்தை காட்டும் நல்லவன்
இந்த உலகத்தில் என்
பெயர் ஏமாளி
என் உள்ளத்தில்
என் பெயர் நல்லவன்
இப்படியும் ஒருவன் இருப்பானா!?
என்பது எல்லோரின் கேள்வி
இப்படியே வாழ வேண்டும்
என்பதே என் வேள்வி
எனக்கு நானே விளம்பரம் தேடிக்கொள்வதில்லை
என்ன செய்தாலும்
அமைதியாய் செய்வேன்
ஆடம்பரம் என்னிடம் என்றுமில்லை
கர்ம வீரரின்
ஏசு நாதரின்
வழி வந்தவன்
சிறு துரும்பையும் உயிரென
நினைக்கிறேன்
யாவையும் மதிக்கிறேன்
எதையும் நசுக்கவோ
அலட்சியம் செய்யவோ
என்னால் முடியாது
ஏனென்றால்
நான் ரொம்ப நல்லவன்
~ பிரபாவதி வீரமுத்து