எதில் இல்லை சுதந்திரம்

எதில் இல்லை சுதந்திரம்!!!

காஷ்மீரிகளை எதற்கும் பயன்படுத்த
இராணுவதற்கு சுதந்திரம்!!
கலவரம் செய்ய
காவிகளுக்கு சுதந்திரம்!!
இந்தி சமஸ்கிருத
மொழி திணிப்பில் சுதந்திரம்!!
ஆவணக்கொலை செய்ய
சாதிவெறியர்களுக்கு சுதந்திரம்!!
வீதிதோறும் மதுசாலை
குடிக்க சுதந்திரம்!!
அரசியல் வாதிகளுக்கு
கொள்ளையடிக்க சுதந்திரம்!!
அரசு அலுவலகங்களில்
லஞ்சம் வாங்க சுதந்திரம்!!
அரசு பெயரால் நிருவனங்களுக்கு
நிலம் பிடுங்கிக சுதந்திரம்!
குடிக்க, விவசாயம் செய்ய நீர் வழங்காமல்
தாமிரபரணியை தாரை வார்க்க சுதந்திரம்!!
அணுஉலை, மீத்தேன், நீயூட்ரினொ என
மண்ணையும், மக்களையும் அழிப்பதில் சுதந்திரம்!!
எதிர்த்து போராடுபவர்களை ஒடுக்க சுதந்திரம்!!

எதில் இல்லை சுதந்திரம்!!

சிந்திக்க சுதந்திரம்???
சிந்தித்து கோந்தளிக்க சுதந்திரம்??
கோந்தளிப்பில் இந்(து)திய கொடி எதிர்க்க சுதந்திரம்??

கொண்டாடுவோம்
போலி சுதந்திரத்தை எதிர்த்து
கொண்டாடுவோம்!!!!

எழுதியவர் : ரெட் சூரியா (25-Aug-16, 7:02 pm)
பார்வை : 73

மேலே