படரு மீண்டும் பூக்க

அவன் மாண்டு போகிறான்
பெண் மரணித்தே வாழ்கிறாள்.

வேசம் கட்டுகிறது சமூகம்
வெள்ளாடைக்காரியாக...

கணவனை இழந்தால்
கைம்பெண் எனும் மணிமகுடமாம்.

தேய்பிறைகூட தெய்வமாம்
தேய்ந்துபோகா குமரி
ஓய்ந்து போனவளாம்
ஒய்யாரம் கூடாதாம்.

பெண் ஆவி ஆர
சாவிதராத
பாவிகள் வாழும் சமூகம் .

அந்திவான மஞ்சள் கூட
அவள் முகம் தொட்டால்
முச்சந்தி கூடி தூற்றுமாம்.

மங்களம் அவள்
மரணிக்கும்வரை இல்லையாம்.

பெண்ணே நீ மாறு.

நீ
உதிரிப்பூவும் அல்ல
உதிர்ந்த பூவும் அல்ல
கதறி அழும் காலம்
கல்லறை போனது.
உதரு மூடநம்பிக்கையை
படரு மீண்டும் பூக்க

எழுதியவர் : அ.ராஜா (26-Aug-16, 5:43 pm)
சேர்த்தது : அராஜா
பார்வை : 93

மேலே