நாளைய என் மனைவி

,அன்றலர்ந்த குமுதமோ நின் முகம்

உன் அழகை கண்ட முழு நிலவும்

நாணி அந்த கார்மேக கூட்டத்தின்

பின்னே சற்றே மறைந்தானோ


எழிலாய் நீ உடுத்திய சிற்றாடை

குமரியே பொங்கும் உன் எழிலை

சொகுசாய் மறைக்குதே இயல்பாக

என்று நான் நினைக்க இங்கிதமாய்

அதை அறிந்தவள் போலே

என் காதருகில் வந்து அவள் சொன்னாள்பொறுத்திடுவாய் "என் அன்பே",

" நாளை நீ ஊரறிய மூன்று முடிச்சு

என் கழுத்தில் கட்டிய பின்னே

உன் பார்வை மட்டுமே அறியும்

மறைந்திருக்கும் இந்த எழிலெல்லாம் "

உன்னை அடைய நாளை என்ன

காலமெல்லாம் காத்திருப்பேன் அன்பே

என்று கூறி இன்பத்தில் மிதந்து

என் இல்லம் சென்றடைந்தேன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Aug-16, 9:07 pm)
Tanglish : naalaiya en manaivi
பார்வை : 287

மேலே