இமையாத விழிகள்

உன் மேனி தூரிகை அள்ளி
மேகம் தன் முகத்தில் பூசி
காலையும் மாலையும்
கண்ணொளி வீசினாலும்...

காதலின் நாணத்தில்
உன் கன்னம் சிவக்கையில்
மேகசிவப்பும் மோகம் கொள்ளுமே
உன் முகமதில் முத்தாட...

உயிருள்ள தூரிகையே
உயிர் கொள்ளும் தாரகையே
என் இமைகளுக்கு சற்று
ஓய்வு கொடு
உனை கான்பதோன்றே வேலையென்றால்
உன் மனக்கதவை திறந்துவிடு..

எழுதியவர் : மிதிலை ச ராமஜெயம் (26-Aug-16, 8:26 pm)
பார்வை : 223

மேலே