விமானம்-கங்கைமணி

விமானம்-கங்கைமணி

மனிதன் இயந்திரத்தை பறக்கச்செய்தான்-
விமானமாக.,

இரவில் தெரியும் இன்னொரு நட்சத்திரம்-
விமானம்.

காற்றுக்கடலில் மிதக்கும் ஓர்-
அற்புத கப்பல்-விமானம்.

இறகை அசைக்காமல் பறக்கும் ஓர்-
செயற்கைப்பறவை-விமானம்.

ஓரிடத்திருந்தோரிடத்திற்கு மனிதன் -
எடுத்தெறியும் அறிவியல் பந்து-விமானம்.

இதிகாச காலத்தில்…
கடவுளை எடுத்துச்சென்றதாம்-
கருடபகவான்.

கலியுகத்தில்…
சாமானியனை எடுத்துச்செல்லும்
கருடபகவான்-விமானம்
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (27-Aug-16, 6:41 am)
பார்வை : 82

மேலே