வான மழை நீ யெனக்கு

மழை பிடிக்கும்,
மழலைக்கும்,
மங்கள இசையும் மழையை
வரவழைக்கும் .
"கொத்து கொத்தாக என் கனவுகள்
கொத்தி செல்கிறது"
தேனீயை போல் கொட்டி செல்கிறது,
நீங்கா வடிவாய் உன் முகம்,
என் கூட்டில் !
பொத்திவைத்துக்கொள்கிறேன்
என் மனக்கூட்டில் !
"நீயின்றி என் உலகம்
நீரின்றி அமையும்"
தத்தளிக்கும் எனக்கு !
தாகம் தீர்கும்
வான மழை நீ யெனக்கு ...!

எழுதியவர் : பாலா (27-Aug-16, 5:22 pm)
பார்வை : 108

மேலே