பாலா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பாலா |
இடம் | : CHENNAI |
பிறந்த தேதி | : 15-Jun-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-May-2015 |
பார்த்தவர்கள் | : 85 |
புள்ளி | : 11 |
இரு கால்கள் ௭னக்கு
அது நான்காய் ஆனது
அவனால்
அவன் வந்ததும் நான் பயணம்
மறந்தேன்
நடை பயணம் மறந்தேன்
இனி நடை பாதைக்கு ஓய்வு
கொடுத்து
நகரம் சுற்றுகிறேன் அவன்
கையை பிடித்து
இது சிறு வயதில் பிடித்த கிறுக்கு
இதற்குள்ளையே கிரங்கி கிடப்பதால்
நிமிடம் போவதே தெரியவில்லை
௭னக்கு
"கண்களுக்குள் விழாக்காலம்
கோடைக்காலம்"
ஆம் கோடை வந்துவிட்டால் போதும்,
ஒரே கொண்டாட்டம் தான்.
இளநீர்,குளிர்பானம்,பழங்கள் விற்பனை அமோகமாக இருக்கும்.
இந்த கொண்டாட்டத்தின் கடவுளே கதிரவன் தான்.
வெப்ப வெயில் தீயாக தாக்கும்.
தேகம் மழையை கேட்கும்.
மழையும் தினமும் பொழியும்
வான மழை அல்ல!
வியர்வை மழை!
சூடு பட்ட மேனியில் சொட்டு சொட்டாய்
வியர்வை மழையாய் பொழியும்,
கண் தான் மின்னல் ஒளி,
கைத்தட்டல்தான் இடிமுழக்கம்,
வியர்வையே மழைத்துளிகள்,
இதுவே எங்களின் மழைக்காலம்
"கோடை மழைக்காலம்"
நான் எரிந்த காதல்
உன் இதயத்தில் விழவில்லை
காற்றின் மூலம் காதல்
அனுப்பியும் பதில் வரவில்லை
கடிதம் எழுதி எழுதி
என் பேனா தேய்ந்துவிட்டது
கடிதமும் தோற்றுவிட்டது
பதில் எழுத உன்னிடம்
காகிதம் இல்லையா
என் மீது காதல் இல்லையா
அத்தனை தூதும்
தூசியாய் போனதால்
நிலாவிடு தூது நிலவு என் நினைவுகளை
உன்னிடம் சொல்லும்...
வழி தவறிய பயணங்கள்
மனம் எனும் மாயை
கட்டிய களத்தில் ,
மனிதன் சிறைக் கைதி !
காலக் கட்டாய நியதியில்
அவன் ஒரு பெரு அகதி !
சந்தர்பம் அவனை பலி கேட்க ,
சந்தேகம் அவன் மீது பழி சொல்ல ,
"பேராசையில் விழுந்த அவன்
பெண்ணாசையில் சிதைந்து போகிறான்"
பாவப்பட்ட அவன் வாழ்வில்
பயணங்கள் வழி தவறி
அவன் பாதை தடம் புரண்டு போகிறது...
நான் இறந்த பிறகு என்
இதயத்தை நீயே பத்திரமாக
வைத்துக்கொள் !!!!
ஏன் ?? என்றால்???
என் இதயம்
எனக்காக வாழ்ந்ததை
விட உனக்காக வாழ்ந்தவையே
அதிகம் !!!!
என்றும் உன்
நட்புடன்
ரேனு,.....
நண்பன்...
என் தனிமைக்கு காவலன்..
என் தாய்மைக்கு மகன் அவன்...
சில சமயங்களில் பூக்களின் இதழ் அவன்...
பல சமயங்களில் புயலின் உரு அவன்...
காலத்தின் காயத்திற்கு மருந்தானான்...
மயில் இறகாய் வருடி மனம் மாற்றினான்..
ஆண்களுக்கும் தாய்மை உணர்வுண்டு என்பதற்கு,
என் தந்தைக்கு பிறகு அவனும் ஒரு எடுத்துக்காட்டு..
வாழ்க்கை தன் கசப்பான பக்கங்களை அவனுக்கு காட்டிய பொழுதும்,
என் புன்னகைக்காக சிரித்தவன்...
நண்பா...
என் கண்களுக்கும் கனவுகளுக்கும் நீயும் ஒரு தாய் தான்..
கருவறையின் கதகதப்பை கரம் பற்றி உணர வைத்த தாய்...
நம் நட்பானது...
வானம் மீது நிலவுக்கு இருக்கும் காதலை போன்றது..
மறைந்தாலும் பிரியாது வ
ஆயிரமும் ஐய்நூறும் ஒழிந்தது !
கருப்புபணம் அறவே அழிந்தது !
கருப்புபண முதலாளிகளின் சாயம் வெளுத்தது.
இப்போதுதான் காந்தியின் தலை ரூபாய் நோட்டில் தலை நிமிர்ந்து கடக்குது !
வல்லரசை நோக்கிய பயணம் தொடர்ந்தது.
"கலாமின் கனவுக்கு விதைத்த முதல் விதை உயிர் பெற்று எழுந்தது"
மழை பிடிக்கும்,
மழலைக்கும்,
மங்கள இசையும் மழையை
வரவழைக்கும் .
"கொத்து கொத்தாக என் கனவுகள்
கொத்தி செல்கிறது"
தேனீயை போல் கொட்டி செல்கிறது,
நீங்கா வடிவாய் உன் முகம்,
என் கூட்டில் !
பொத்திவைத்துக்கொள்கிறேன்
என் மனக்கூட்டில் !
"நீயின்றி என் உலகம்
நீரின்றி அமையும்"
தத்தளிக்கும் எனக்கு !
தாகம் தீர்கும்
வான மழை நீ யெனக்கு ...!