நண்பன்

நண்பன்...
என் தனிமைக்கு காவலன்..
என் தாய்மைக்கு மகன் அவன்...
சில சமயங்களில் பூக்களின் இதழ் அவன்...
பல சமயங்களில் புயலின் உரு அவன்...
காலத்தின் காயத்திற்கு மருந்தானான்...
மயில் இறகாய் வருடி மனம் மாற்றினான்..
ஆண்களுக்கும் தாய்மை உணர்வுண்டு என்பதற்கு,
என் தந்தைக்கு பிறகு அவனும் ஒரு எடுத்துக்காட்டு..
வாழ்க்கை தன் கசப்பான பக்கங்களை அவனுக்கு காட்டிய பொழுதும்,
என் புன்னகைக்காக சிரித்தவன்...
நண்பா...
என் கண்களுக்கும் கனவுகளுக்கும் நீயும் ஒரு தாய் தான்..
கருவறையின் கதகதப்பை கரம் பற்றி உணர வைத்த தாய்...
நம் நட்பானது...
வானம் மீது நிலவுக்கு இருக்கும் காதலை போன்றது..
மறைந்தாலும் பிரியாது வானத்தை விட்டு...

எழுதியவர் : ஆதர்ஷினி (3-Nov-16, 11:50 am)
Tanglish : nanban
பார்வை : 1457

மேலே