தீண்டாமைக்கு உரியவன்
இவன் தீண்டத் தகாதவன் தான் ;
அதில் என்ன ஐயம் உங்களுக்கு ???
நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம் இவனது வலிமையை ???
சமூகத்திற்க்காக உழைக்கும் ஒருவனின் சேவை ;
இவர்களை மதிக்க வேண்டிய அவசியம் இல்லை;
ஒதுக்காமல் இருந்தால் போதும் உயர்வர் ஒரு நாள் ;
உள்ளத்தில் வலிமை உள்ள ஒருவனை ஊக்கம் உயர்த்தும் ;
உண்மை தனை உலகிற்கு உணர்த்தும் காலம் வெகு தூரம் அல்ல ;
அப்போது தான் புரியும் அத்தீண்டத்தகாதவனின் அருமை .