பார்வைகள் பல விதம்
கவலைகள் அறியாத சின்ன மயிலே
குவளை மலர் கண்கள் திறந்து
அவலங்கள் நிறைந்தச் சமூகம் பார்க்கின்றாயோ?...
சவங்களாய் மனிதனங்கு உயிரிருந்தும் அலைகின்றானே......
மஞ்சள் தாலியொன்று கழுத்தில் கட்டியதால்
வஞ்சிக்கு வன்முறை தினந்தோறும் செய்கின்றானே...
கொஞ்சி விளையாடும் பிஞ்சுகளிடம் சாதிகளெனும்
நஞ்சினை விதைப்பதை வெறுத்துதான் காண்கின்றாயோ?......
படித்த உள்ளத்திலும் பகுத்தறிவு இல்லையே...
வடித்த சிலையிலும் காமத்தின் பார்வையே...
விடியாத அகயிருளில் மூழ்கி விட்டாரென்று
விடியல் ஒன்றை புதுவுலகில் தேடுகிறாயே......

