எனக்கு என்னையே பிடித்தது

காதல் செட் ஆகாததால் வெறித்துப்பார்த்த என்னிடம்
காதலில் சிக்குண்டு பின் தோல்வியில் சிதறுண்ட நண்பன் சொன்னான்,

"நானும் உன்னை மாதிரி
இருந்திருந்திருக்கலாம்" என்று !

அப்போது தான் எனக்கு
காதல் பற்றி புரிந்தது!...

மது பழக்கம் இல்லாத என்னை பார்த்து,
மது பழக்கம் உள்ள நண்பன் சொன்னான்,

"நானும் உன்னை மாதிரி
இருந்திருந்திருக்கலாம்" என்று !

அப்போதுதான், எனக்கு
என்னையே பிடித்தது!...

எழுதியவர் : செல்வமணி (27-Aug-16, 9:56 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 193

மேலே