உங்களை நான் என்ன சொல்ல
கண்டுகொள்ள மாட்டோம்
கண்முன்னே வன்புணர்வை
நானும் கடவுளும்
பார்வை மாற்றுத்திறானாளி
காதில் போட்டுக்கொள்ள மாட்டோம்
பசியில் யாசிக்கும்
ஏழையின் ஈனசுரத்தை
நானும் கடவுளும்
காதுகேளா மாற்றுத்திறானாளி
ஓடி வாங்க மாட்டோம்
உலகின் சுமைகளை
நானும் கடவுளும்
கால்கள் மாற்றுத்திறானாளி
குரல் கொடுக்க மாட்டோம்
நீதிக்கெல்லாம் கோஷம் போட்டு
நானும் கடவுளும்
மௌனமான மாற்றுத்திறனாளி
சரி..
எங்களிருவரையும் விடுங்கள்.
அப்படி எதுவுமில்லை உங்களிடம்
ஐம்புலன்களில் குறையென்று
ஆனாலும்
எல்லாம் கண்டும் காணாமல் போகும்
உங்களை நான் என்ன சொல்ல..?