அழகு
மனம் பார்த்து வந்த அழகு,
மறுக்கப்பட்டாலும்
மறக்கப்பட்டதில்லை.
பார்வையற்றவன்
பார்த்த ஒலியின் அழகை,
கண்ணுள்ளவன் கூட
கண்டதில்லை.
இயற்க்கையின்அழகை,
எல்லாம் இருப்பவன்
நழுவ விட்டான்.
இல்லாதவனோ,
இயற்க்கையை வேறுபடுத்த
தவறிவிட்டான்.
பேசத் தெரியாத குழந்தை ,
தன் உணர்வை
வெளிப்படுத்தும் அழகை,
பேச்சாளன் நழுவவட்டான்.
ஒன்று புரிகிறது,
இல்லாதவையிடம்
இருக்கும் அழகு,
எல்லாம்
இருக்கும் இடத்தில்
இல்லை.