கிராமத்து தேவதை

ஆண்மயில்கள் அத்தனையும்
பெண்மயிலாய் மாறியதோ
வானவில்லின் ஏழுவண்ணம்
பூமிமீது வந்ததுவோ

மின்னல்தரும் வெளிச்சமெல்லாம்
கண்களிப்போ தருகிறதே
சாமியெல்லாம் ஊருக்குள்ளே
நடப்பதுபோல் இருக்கிறதே

சிரிப்பிற்கு பஞ்சமில்லை
களிப்பான பேச்சுவுண்டு
தோழிகூட சேர்ந்துகிட்டா
பெருசுக்கெல்லாம் கேலியுண்டு

பளபளப்பு முகத்திலுண்டு
வெள்ளாந்தி மனசிலுண்டு
பாசம்மொத்தம் கொண்டதுதான்
எங்ககிராமத்து தேவதைகள்

வீட்டிக்கொரு விளக்கிவர்கள்
கட்டுப்பாட்டிற்கு விளக்கமிவர்கள்
கடமைதட்டி கழிக்கமாட்டர்
கண்ணியமாய் நடந்துகொள்வர்

பெற்றோருக்கும் உற்றாருக்கும்
பொக்கிஷங்கள் தானிவர்கள்
கல்வியறிவும் கூடசேர
கலங்கரைவிளக்கம் தானிவர்கள்

அழகான ஓவியங்கள்
படபடக்கும் பட்டாம்பூச்சிகள்
இதயத்திற்கு இதமளிக்கும்
அமைதியான தென்றலிவர்கள்

மேனாட்டு நாகரீகம்
அத்தனையும் கற்றிருப்பர்
தொழில்நுட்பம் குழப்பமின்றி
தெளிவாகத் தெரிந்திருப்பர்

புத்திசாலி தானிவர்கள்
புரிந்துகொள்ளும் தன்மையுண்டு
பத்தாம் பசலியல்ல
எங்க கிராமத்துதேவதைகள்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Aug-16, 6:51 am)
பார்வை : 359

மேலே