உழவனின் உழுத மனது
உழவனின் உழுத மனது
இன்றொ அழுத மனதானது
உழவனின் வாழ்வு நதியோ
பள்ளத் தாக்கில் பாயுது
கிருமிகள் பல வந்தவன்
உடலைத் தின்னப் பார்க்குது
உரிமைகள் பறிக்கப் பட்டு
வாழ்வு அந்தரத்தில் ஆடுது
நேற்றைய துக்கம் அவனை
போட்டு பலமாய் அமுக்குது
நாளைய வாழ்வோ எதிரே
அரக்கன் போல நிற்குது
அடிப்படை ஆதாரம் இன்றி
துடிக்குது உழவர் கூட்டமே
வெடித்திடும் கால்களைக் கொண்டு
அவன் வாழ்வே போராட்டமே
ஆடுகள் மாடுகள் விற்றான்
காட்டையும் நிலத்தையும் விற்றான்
வீட்டையும் விற்று இன்றோ
வீதியில் அழுது நின்றான்
விதியெனும் கொடியது இப்போ
அவன் உயிரையும் குடித்திடுமோ
நிதிகளும் நிம்மதியும் இன்றி
வாழ்விப்படி பொட்டலாய் ஆகிடுமோ
வாழ்வென்று மாறுமோ அவன்முகம்
சிரிப்பை என்றுதான் காணுமோ
நிர்க்கதி அற்று நிற்கின்றான்
கஞ்சிக்கும் கடன்பட்டு வாழ்கின்றான்