தலைப்பை தொலைத்த கவிதை -கங்கைமணி
தாய் தந்தையை பிரிந்த குழந்தை -அது
தலைப்பைத தொலைத்த கவிதை.
புன்னகை சிதைந்த ஓவியம் -அது
புலம்பலில் தொடங்கும் காவியம் .
ஏக்கப்பெருமூச்சோடு-
ஈன்றவர் தேடும் அவர் நிழல்...
பெரும் துயரச்சுடுமணல் தன்னில் –
உதிர்ந்து வாடும் ஒரு மலர்.!
இனி...
பாவப்பனித்திரை போர்த்தியே - சமுதாயமதன்
பறக்கும் சிறகுகள் ஒடிக்குமே!
சொந்தமெனும் ஒரு பெரும் சுழல்-போடும்
சூட்சம முடிச்சுகள் தொடருமே !
விரக்தியில் உள்ளம் வெதும்பும்-அது
வெறுப்பில் மெதுவாய் அரும்பும்.
தாயின் ஸ்பரிசம் மறந்து...
தந்தையின் கைவிரல் விடுத்து....
தெருவினில் தனியாய் அலைந்து
பெரும் துயரினை தினம் தினம் கடந்து-
பிள்ளை ஆலமரமென வளர்ந்தும்.,
அனுபவ அறிவினால் ஜெயித்தும்-உலகை
அடி அடியாய் தினம் அளந்தும்.,
சமூகம்...
அனாதை” எனுமொரு சொல்லில்-அவர்
அடிமனதை தினம் அறுக்கும்-அதில்
பொடிப்பொடியாய் உள்ளம் நொறுங்கும்.
-கங்கைமணி