பூலோகம் சொர்கம் ஆவது எப்போது
உண்மையே நீ எங்கே போய்
ஒளிந்துக்கொண்டாயோ/
தெரியவில்லையா, நான்
பொய்யைத் தேடி போகின்றேன்
என்றது திருடனைத் தேடும்
போலீஸ் போலே.உண்மை
ஒளியே நீ எங்கே ஓடுகிறாய்
என்றால் நான் என் கருத்த தங்கை
இருளைத் தேடி என்றது ,
இருளே இல்லாமல் போய்விட்டதோ
என்று தோன்றிற்று
ஆதவனைக் கேட்டேன்
எங்கே நீ போகின்றாய் என்று ,
நிழலைத்தேடி என்றான்
நிழலும் வாராமல் போனதேனோ
தெரியவில்லையே
ஒன்றில்லாமல் மற்றோன்று
தோன்றுவது ஏது, இவ்வுலகில்
அவ்வாறு தோன்றின்
இவ்வுலுகம் பூலோகம் இல்லாது
சுவர்க்கம் ஆயிடுமே