என் கற்பனையில் காதல்

மழையிற்கு துளியாக உடம்பிற்கு உயிராக உறவிற்கு உண்மையாக உறங்கிக் கிடந்த என்னை தட்டி எழுப்பி விட்டு சென்றாய் ! உன் நினைவுகளுடன் நானிருக்கிறேன் இங்கே நீ எங்கிருக்கிறாய் பெண்ணே !

இருட்டினில் இருக்கையில் இன்பத்தை வெறுக்கையில் இதமான உணர்வாக தரமான உன் நிறமாக நான் காணும் கனவாக நீ வேண்டும் என் உறவாக நான் ஆக வேண்டும் உன் கணவனாக எனும் ஆசையில் காத்திருக்கிறேன்.

காதல் சொல்ல வந்த நேரம் மோதல் கொண்டு என்னை நீ பார்த்த நிமிடம் தேடலுடன் உன் அருகில் நான் வருகையில் கோபம் கொண்டு நீ எடுத்த முடிவு என்னை தூக்கி எறிந்த பிறகும் உனக்காக நானிருப்பேன் என்றும் !

பெண்ணே ! என்று உன்னை கண்டேன் அன்று என்பது கனவாக மாறியது இன்று ஆசைக்கு ஒன்று உன் காதலுக்கு நான் நன்று என்று நீ நினைக்க வேண்டும் என்றும் என்பதை வெறுமையாக எண்ணி விடாதே !

கற்பனை வரிகள் ஆனால் கவிதை துளிகள் :- அப்துல் ஹமீட்.

எழுதியவர் : (27-Aug-16, 9:49 pm)
பார்வை : 149

மேலே