அப்துல் ஹமீட் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அப்துல் ஹமீட் |
இடம் | : இலங்கை |
பிறந்த தேதி | : 17-Apr-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Aug-2016 |
பார்த்தவர்கள் | : 160 |
புள்ளி | : 62 |
தமிழில் கவிதைகள் எழுத அதிகமாக பிடிக்கும் ஆனால் என்னால் முடியுமான அளவிற்கு ஆன்மிகம், காதல், இஸ்லாம், நவீன உலகம் மற்றும் பல விதமான முறைகளில் கவிதைகளை எழுதி அதை புத்தகமாகவும், Facebook மூலமாகவும் வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
மழை வரும் நேரம் குடைக் கொண்டு வாரும் இது இலையுதிர் காலம், கருத்த மேகம் பொழிந்த மழை துளி துளியாக கண் விழி முன் விறு விறு வென விழும் நேரம் துரு துரு வென நோட்ட மிட்டே பயணம் தொடரும்.
கருத்த மேகம் கண் கவர்ந்த நேரம் கற்பனை யாவும் கவிதையாக மலர்ந்த போது அறியாத அனைத்தும் அழகிய அமைப்பாக அடிமனம் அழைக்கும் அதிசயமிக்க அமைதிப் பொழுது அரவணைத்த நிகழ்வு வாழ்வின் உயர்வு !
வெறிப் பிடித்த வெயிலில் அடிவைத்த நேரம் வாழ்வின் கடின உயர்வு எனும் அளவு அதிகமான பொழுது வெடி வெடித்த வேகம் வீணா போன சோகம் விரட்டி அதில் அனைத்தையும் புரட்டி கலப்படமான வாழ்வாக மாறிவிட்டது !
நூலகம் சென்று நூல்களைப் படித்து நூதகமான முறையில்
அழுகையுடன் உலகிற்கு வந்த மனிதன் ஜனாஷா தொழுகையுடன் உலகை விட்டு மண்ணறைக்குச் சென்று விடுகிறான் எனவே உலக வாழ்க்கை தொடரும் ஆனால் நிரந்தரமல்ல !
தாயின் அன்பையும் தந்தையின் பண்பையும் உணர்ந்து கொண்ட பிள்ளைக்கான சிறப்பு உலகில் வாழும் மக்களுக்கு வியப்பாக மாறிவிடும் ஆனால் இழப்பாக ஆகிவிடாது !
வரங்களை வேண்டி பாவத்தைத் தாண்டி இறைவனை தேடிச் செல்லும் ஒருசில சுயநலவாதி மனிதர்களது எண்ணம் ஒருபோதும் பொய் தரும் நிஜமாக மாறிவிடாது என்பதே உலகில் உண்மை !
பணத்தினால் பெற்ற அனைத்தையும் சில நேரம் இழக்க நேரிடலாம் ஆனால் குணத்தால் பெற்ற அனைத்து புகழையும் ஒருபோதும் இழக்க நேரிடாது ஏனெனில் குணம் மனிதனின் நிழலாகும்.
தனிமையுடன் காத்திருந்த காலங்கள் பல பாடங்களை வாழ்க்கையில் கற்றுத் தந்ததை உணர்ந்தவனாக கால்கள் போனப்போக்கில் செல்லும் பயணம் ஒருநாள் என் சோகத்தை இறைவனிடம் சொல்லும் !
மாய உலகில் இறைவனின் வியக்கும் படைப்பு மனிதன் என்பதை எந்த ஒரு மனிதனாலும் மறுக்க முடியாது ஏனெனில் இரவும் பகலும் எவ்வாறு மாறுகின்றதோ அவ்வாறே பாவமும் நன்மையும்.
உலக புகழை எதிர்பார்த்து பல சேவைகளை சாதனைகளாக செய்து வரும் கூட்டத்திற்கு செய்யும் சேவைகளுக்கு வெகுமதி ஒருபோதும் இறைவனிடம் கிடைக்கப் போவதில்லை என்பதே உண்மை !
மார்க்கத்தை கற்று தாடியை வைத்து உலகிற்கு உபதேசத்தை செய்யும் அனைவரும் உத்தமன்களாக வாழ்வதில்லை என்பது மிகவும் கசப்பான
கன்னிப் பெண்ணை கண்டவுடன் கண்ணில் ஏற்பட்ட காமத்தை அவளுடன் அரங்கேற்ற துடிக்கும் வாலிபனே ! கட்டிலுக்கு விதிவிளக்கு அவள் உனக்கு மனைவி என்றால் அதுவே உனக்கு குலவிளக்கு என்பதை நீ விளங்கு !
பூமியாக நீயிருந்தாய் ! வானமாக நானிருந்தேன் மேகமாக நான் வந்தேன் அதில் பெய்யும் மழையாக நீ வருகிறாய் ! உடலாக நானிருக்கிறேன் எனக்கு நிழலாக நீ வருகிறாய் ! உயிராக நானிருக்கிறேன் அதற்கு உணர்வாக நீயிருக்கிறாய் !
காதல் சொல்ல வந்தேன் பெண்ணே ! அதை அறிந்தவுடன் என்னை விட்டு நீ ஏன் ஓடினாய் பெண்ணே ? உனக்கானவன் நானே எனக்கானவள் நீயே எமக்காகவே காதல் அதற்காகவே காமம் என்பதே எம் காதலின் நோக்கம்.
ஆசையுடன் நீ குளிக்க வரும் ஆத்தோ
Body of Human, Modern of Life & Spend of Time. என்ற கோட்பாட்டில் கீழ் மனிதனின் வாழ்க்கை முறையினை இறைவன் அமைத்துள்ளான் ஆனால் அதையும் தாண்டி தன்னை ஒரே இறைவன் என்று மனதால் ஏற்று தனக்கு இணை வைக்காமல் தன்னை வழங்குமாறு மனிதர்களுக்கு இறைவன் கட்டளையிட்டுள்ளான்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு Weakness நிச்சயமாக இருக்கும் என்பதை சக மனிதர்களும் தெரிந்து கொள்வது இயற்கையாகும். ஆனால் அதற்கான மருந்தை மனிதனால் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது ஏனென்றால் குறையின்றி மனிதனை இறைவன் படைப்பதல்ல என்பதை நிச்சயமாக ஏற்கவேண்டும்.
மூளையில் (Brain) சிந்திக்கப்படும் விடயங்கள் உள்ளத்தில் பதிவேற்றம் (Upload) செய்யப்பட்டு பின்ப
சிரழிந்து போகும் மனிதனே !, சிந்தனை செய்ய மறவாதே, நிந்தனையுடன் வாழ்வை கழிக்காதே ! ஏனெனில் நாளை மண்ணோடு மண்ணாகி போகும் மனிதனாக நீயிருக்கிறாய் !
ஆதமின் மகனே ! உலக சுகங்களில் ஆழ்ந்து கிடக்காதே ஏனெனில் உலகம் ஒருநாள் அழியும் என்பதை மறக்காதே ! வீணாக வீம்புடன் வாழ்வை வாழாதே !
மனிதனே ! பேசுவதெல்லாம் இனிமை, நடப்பதெல்லாம் தன்மை, விரும்புவதெல்லாம் தனிமை, என்பதெல்லாம் உண்மை என்று வாழ்வதெல்லாம் நன்மை என்பதை மறவாதே !
மனிதனே ! சரித்திரம் படைத்த மனிதனாக வாழ்வதை விட பிற மனிதர்களுக்கு முடியுமான உதவிகளை முழுமனசுடன் செய்யும் மனிதனாக வாழ்வதே இம்மையிலும், மறுமையிலும் சிறந்தது.
அன்பர்களே ! சிந்திப்பதற்காக இவ்வரிகளை எழுதியுள்ளேன் எனவே படிப்பதற்கு நேரமிருந்தும் இவ்வரிகளை படிக்க மறந்து விடாதீர்கள் ஏனெனில் உபதேசங்களாக இதை எழுதியுள்ளேன்.
ஏழையின் மனக்குமுறல் பசியால் துடித்தேன், வறுமையால் கண்ணீர் வடித்தேன், வேதனையால் தவித்தேன், துன்பத்தை நெருங்கினேன், இன்பத்தை விரட்டினேன் பின்பு வாழ்க்கையில் நொறுங்கினேன் என்பதை நினைத்து வருந்தினேன்.
பெண்ணிற்கோ தவிப்பு அதை காணும் ஆண்களுக்கோ வியப்பு சீதனையின் மதிப்பு பெண்ணிற்கு பாரிய இழப்பு என்பதை அறியாத ஆண்களுக்கு இது ஒரு மானகெட்ட பிழைப்பு எனவே பெண்ணைப் பார்த்து உன்னை அவளுக்கு விற்பனை செய்யாதே !
கல்வி கற்று சிகரம் தொடும் கனவை காணும
வாழ்வின் வலியை அறிந்தவன் இவன் வறுமையின் பசியை உணர்ந்தவன் இவன் வயதின் மதிப்பு தெரிந்தவன் இவன் வாலிபத்தின் ஏக்கம் புரிந்தவன் இவன் தன்னை உருக்கி தங்கம் சேர்கிறான் தங்கைகாக கடின உழைப்பால் கடனை அடைக்குறான் தந்தைகாக இவனின் பகுதி நேர உழைப்பில் துடிக்குறது தம்பியின் முழு நேர படிப்பு இவன் பட்டபாடுகளின் பாதி பலன்கள்,அக்கா கணவனின் கையில் ஆபரண அணிகலன் உழைப்பவன் இவன் ஓடுகிறான்..... வாரம் முழுவதும் ஓடுகிறான்... வார விடுமுறையிலும் ஓடுகிறான் வருடம் முழுவதும் ஓடுகிறான் வாழ்வின் ம (...)
காற்றுடன் பேசி, தனிமையை நேசி, என்பதை யோசி என்று சென்ற பயணம் என்றும் தொடரும் தருணம் வாழ்க்கை எனும் பாடம் பலவற்றைக் கற்றுத் தந்த நேரம், பெற்ற வரனாக மாறியது அனுபவம்.
இறைவனின் கற்பனையில் உதித்த உலகம் வெடித்த மனிதர்களால் நிரப்பப்பட்ட தருணம் பாவங்களும், நன்மைகளும் அரங்கேறும் நேரம் சோகமும், மோகமும் மனிதனை பிடித்துக் கொள்கின்றன.
உலக புகழ் ஒருநாள் மனிதனை உதைத்து விரட்டியடிக்கும் என்பதை அறியாத மனிதன் பொறுமை எனும் இயற்கையை வெறுத்து பொறாமை எனும் செயற்கையை இயற்கை என நம்பிவிடுகின்றான்.
“பணத்தின் நிறம் என்னவென்று புரியாத மனித குணம்” ஏனெனில் பணம் எனும் காகிதம் மனிதனை இறைவனிடம் நெருங்குவதை தடுத்து விட