வாழும் வாழ்க்கையில் சோகம்

தனிமையுடன் காத்திருந்த காலங்கள் பல பாடங்களை வாழ்க்கையில் கற்றுத் தந்ததை உணர்ந்தவனாக கால்கள் போனப்போக்கில் செல்லும் பயணம் ஒருநாள் என் சோகத்தை இறைவனிடம் சொல்லும் !

மாய உலகில் இறைவனின் வியக்கும் படைப்பு மனிதன் என்பதை எந்த ஒரு மனிதனாலும் மறுக்க முடியாது ஏனெனில் இரவும் பகலும் எவ்வாறு மாறுகின்றதோ அவ்வாறே பாவமும் நன்மையும்.

உலக புகழை எதிர்பார்த்து பல சேவைகளை சாதனைகளாக செய்து வரும் கூட்டத்திற்கு செய்யும் சேவைகளுக்கு வெகுமதி ஒருபோதும் இறைவனிடம் கிடைக்கப் போவதில்லை என்பதே உண்மை !

மார்க்கத்தை கற்று தாடியை வைத்து உலகிற்கு உபதேசத்தை செய்யும் அனைவரும் உத்தமன்களாக வாழ்வதில்லை என்பது மிகவும் கசப்பான ஒரு உண்மையாகும் என்பதை அனைவரும் ஏற்கவேண்டும்.

உலகை படைத்து அதில் மனித இனத்தை பரவ செய்து நன்மை தீமை போன்ற கருவியால் மனிதனை சோத்தித்து அதில் வெற்றிபெறும் மனிதனுக்கு மறுமையில் சுவர்க்கம் வெகுமதியாக கிடைகின்றது.

எழுதியவர் : அப்துல் ஹமீட் (26-Sep-16, 10:55 pm)
சேர்த்தது : அப்துல் ஹமீட்
பார்வை : 245

மேலே