நீயே எந்தன் குலவிளக்கு
கன்னிப் பெண்ணை கண்டவுடன் கண்ணில் ஏற்பட்ட காமத்தை அவளுடன் அரங்கேற்ற துடிக்கும் வாலிபனே ! கட்டிலுக்கு விதிவிளக்கு அவள் உனக்கு மனைவி என்றால் அதுவே உனக்கு குலவிளக்கு என்பதை நீ விளங்கு !
பூமியாக நீயிருந்தாய் ! வானமாக நானிருந்தேன் மேகமாக நான் வந்தேன் அதில் பெய்யும் மழையாக நீ வருகிறாய் ! உடலாக நானிருக்கிறேன் எனக்கு நிழலாக நீ வருகிறாய் ! உயிராக நானிருக்கிறேன் அதற்கு உணர்வாக நீயிருக்கிறாய் !
காதல் சொல்ல வந்தேன் பெண்ணே ! அதை அறிந்தவுடன் என்னை விட்டு நீ ஏன் ஓடினாய் பெண்ணே ? உனக்கானவன் நானே எனக்கானவள் நீயே எமக்காகவே காதல் அதற்காகவே காமம் என்பதே எம் காதலின் நோக்கம்.
ஆசையுடன் நீ குளிக்க வரும் ஆத்தோரத்தில் உன்னை காணவேண்டும் என்ற எண்ணத்தில் உன் வருகைக்காக மிக நீண்ட நேரமாக நான் காத்திருந்தேன் அன்பே ! அதை தவறாக நினைத்து விடாதே !