மனித வாழ்வு முடியும் பொழுது

அழுகையுடன் உலகிற்கு வந்த மனிதன் ஜனாஷா தொழுகையுடன் உலகை விட்டு மண்ணறைக்குச் சென்று விடுகிறான் எனவே உலக வாழ்க்கை தொடரும் ஆனால் நிரந்தரமல்ல !
தாயின் அன்பையும் தந்தையின் பண்பையும் உணர்ந்து கொண்ட பிள்ளைக்கான சிறப்பு உலகில் வாழும் மக்களுக்கு வியப்பாக மாறிவிடும் ஆனால் இழப்பாக ஆகிவிடாது !
வரங்களை வேண்டி பாவத்தைத் தாண்டி இறைவனை தேடிச் செல்லும் ஒருசில சுயநலவாதி மனிதர்களது எண்ணம் ஒருபோதும் பொய் தரும் நிஜமாக மாறிவிடாது என்பதே உலகில் உண்மை !
பணத்தினால் பெற்ற அனைத்தையும் சில நேரம் இழக்க நேரிடலாம் ஆனால் குணத்தால் பெற்ற அனைத்து புகழையும் ஒருபோதும் இழக்க நேரிடாது ஏனெனில் குணம் மனிதனின் நிழலாகும்.
மனித பேச்சின் வீச்சி மனிதனை மகிழ்ச்சியில் ஆழ்த்தலாம் ஆனால் ஒருநாள் அந்த மகிழ்ச்சியின் வளர்ச்சிக்கு பாரிய வீழ்ச்சியை இறைவன் உண்டாக்கி விடுவான் என்பதை மறந்திட வேண்டாம்.