கல்லறை உறக்கம்

அன்று தன் வயிற்றில்
சுமந்து தன் இதயத்துடிப்பை
எனக்கு இசையாக்கி வளர்த்த
என் அம்மாவையும்.....
இன்று தன் மனதில்
சுமந்து தன் இதயத்துடிப்பை
எனக்கு காதல் இசையாக்கி வாழும் என் கணவனையும்.....
என் கடைசி இடமான
கல்லறை உறக்கம் கூட
மறக்கச் செய்திட முடியாது...!