தனிமையுடன் சென்ற பயணம்

காற்றுடன் பேசி, தனிமையை நேசி, என்பதை யோசி என்று சென்ற பயணம் என்றும் தொடரும் தருணம் வாழ்க்கை எனும் பாடம் பலவற்றைக் கற்றுத் தந்த நேரம், பெற்ற வரனாக மாறியது அனுபவம்.

இறைவனின் கற்பனையில் உதித்த உலகம் வெடித்த மனிதர்களால் நிரப்பப்பட்ட தருணம் பாவங்களும், நன்மைகளும் அரங்கேறும் நேரம் சோகமும், மோகமும் மனிதனை பிடித்துக் கொள்கின்றன.

உலக புகழ் ஒருநாள் மனிதனை உதைத்து விரட்டியடிக்கும் என்பதை அறியாத மனிதன் பொறுமை எனும் இயற்கையை வெறுத்து பொறாமை எனும் செயற்கையை இயற்கை என நம்பிவிடுகின்றான்.

“பணத்தின் நிறம் என்னவென்று புரியாத மனித குணம்” ஏனெனில் பணம் எனும் காகிதம் மனிதனை இறைவனிடம் நெருங்குவதை தடுத்து விடுகின்றது எதனால் என்றால் பணம் எனும் பெருமையால் என்பதை மறந்திடகூடாது !

சோகம் நிறைந்த வாழ்க்கையில் சுகம் என்ற மருந்தை எடுத்துக் கொள்வதற்கு மனம் தயங்குகின்றது எதற்காக என்று புரியாமல் அங்கும், இங்கும் அலையும் கூட்டத்தில் நானும் ஒருவனாக மாறிவிட்டேன்.

எழுதியவர் : அப்துல் ஹமீட் (28-Aug-16, 8:49 am)
பார்வை : 94

மேலே