மனித நேயம்
“மதம் கடந்த மனிதநேயம்” என்ற கோட்பாட்டின் கீழ் உங்களது செயற்பாடுகளை அமைத்துக்கொண்டு உலகில் வாழும் மக்கள் அனைவருக்கும் மனிதாபிமான முறையில் உதவிகளை மனித நேயத்துடன் எந்நேரமும் செய்வதற்கு தயார் நிலையிலிருங்கள்.
பிறப்பும், இறப்பும் நிகழும் வகையில் மனிதனை இறைவன் படைத்துள்ளான். எனவே உலகத்தில் நிரந்தரமாக மனிதனால் வாழமுடியாது என்பதை ஒவ்வொரு மனிதனும் உணரவேண்டும் ஏனெனில் உலகம் ஒருநாள் அழிந்தேத் தீரும்.
“பெருமை எனும் கத்தி உன்னை குத்தி கொலை செய்யும் யுக்தி” என்பதை அறிந்தும் அறியாத மனிதர்கள் தங்களது இறைவனை அடியோடு மறந்து தங்களது புகழை உலகம் உரத்து கூறவேண்டும் என்ற நோக்கில் அன்று முதல் இன்று வரையும் வாழ்கின்றனர்.
ஒரு மதத்தைச் சார்ந்தவர் பிற மதத்தவர்களை தவறாக சித்தரிப்பது மிகவும் தவறான ஒன்றாகும். ஏனெனில் “உன் மதம் உனக்கு மட்டும்” என்ற நோக்கம் மனிதர்களிடத்தில் ஆழ்ந்து பதியப்பட வேண்டும். இல்லையனில் அங்கு மதத்துவேசம் தான் உண்டாகும்.
என் மத கடமைகளை சரியாக நிறைவேற்றும் மனிதனாக நானிருக்கிறேன். என்ற தற்பெருமை தனம் கொண்ட எந்த ஒரு மனிதனும் இறைவனுக்கு செலுத்த வேண்டிய நன்றிக்கடன்களை சரியாக செலுத்துவதில்லை என்பதே இங்கு உண்மை !