மழை வரும் நேரம் குடைக் கொண்டு வாரும்

மழை வரும் நேரம் குடைக் கொண்டு வாரும் இது இலையுதிர் காலம், கருத்த மேகம் பொழிந்த மழை துளி துளியாக கண் விழி முன் விறு விறு வென விழும் நேரம் துரு துரு வென நோட்ட மிட்டே பயணம் தொடரும்.

கருத்த மேகம் கண் கவர்ந்த நேரம் கற்பனை யாவும் கவிதையாக மலர்ந்த போது அறியாத அனைத்தும் அழகிய அமைப்பாக அடிமனம் அழைக்கும் அதிசயமிக்க அமைதிப் பொழுது அரவணைத்த நிகழ்வு வாழ்வின் உயர்வு !

வெறிப் பிடித்த வெயிலில் அடிவைத்த நேரம் வாழ்வின் கடின உயர்வு எனும் அளவு அதிகமான பொழுது வெடி வெடித்த வேகம் வீணா போன சோகம் விரட்டி அதில் அனைத்தையும் புரட்டி கலப்படமான வாழ்வாக மாறிவிட்டது !

நூலகம் சென்று நூல்களைப் படித்து நூதகமான முறையில் கல்வியைக் கற்று அதில் படிப்பினை பெற்று உண்மையை சற்று சிந்தித்த ஒன்று முறையாக நின்று உபதேசம் ஒன்றை சமூகத்திற்காக இன்று வழங்கிட வேண்டும் என்றும் !

பிறர் வீட்டு கூரை ஏறி குறைகளை பேசி திரியும் மரங்களை தாவும் குரங்குகள் கூட்டம் தன் வீட்டு கூரை தரமற்றதாக இருப்பதை மறந்து விட்டு பிறர் வீட்டு கூரையை குறிப் பார்த்து குறைக்கூறி வாழ்ந்து வருகின்றனர்.

வரிகள் :- அப்துல் ஹமீட்.

எழுதியவர் : அப்துல் ஹமீட் (14-Jan-17, 10:31 pm)
சேர்த்தது : அப்துல் ஹமீட்
பார்வை : 208

மேலே