சிந்தனைகள்

குற்றமுள்ள மனதில் அமைதி என்றுமில்லை...

அன்புள்ள மனம் மன்னிக்கவும், மன்னிப்புக் கேட்கவும் தயங்குவதில்லை...

தனிமனிதனென்பவன் திருந்தாவிட்டால், அகிலம் திருந்துவதென்பதும் சாத்தியமில்லை...

இயற்கையின் சக்தி வெளிப்படுகின்ற போது,
பிற சக்திகளுக்கு தடுக்கும் தகுதி இல்லை....

மனவியல் மருத்துவம் காணாமல், உடலியல் மருத்துவமும் பயனில்லை...

குறைகூறுவதே நோக்கமாகக் கொண்டால் நிறைகாண்பதென எதுவுமில்லை...

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்றால் மனதில் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை...

யாவரும் நல்லெண்ணங்களைக் கொண்டால்,
செயலென்றுமே தீமையாய் போவதில்லை...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (14-Jan-17, 8:06 pm)
Tanglish : sinthanaikal
பார்வை : 1831

மேலே