சிந்தனைக்கு சில வரிகள்
அன்பர்களே ! சிந்திப்பதற்காக இவ்வரிகளை எழுதியுள்ளேன் எனவே படிப்பதற்கு நேரமிருந்தும் இவ்வரிகளை படிக்க மறந்து விடாதீர்கள் ஏனெனில் உபதேசங்களாக இதை எழுதியுள்ளேன்.
ஏழையின் மனக்குமுறல் பசியால் துடித்தேன், வறுமையால் கண்ணீர் வடித்தேன், வேதனையால் தவித்தேன், துன்பத்தை நெருங்கினேன், இன்பத்தை விரட்டினேன் பின்பு வாழ்க்கையில் நொறுங்கினேன் என்பதை நினைத்து வருந்தினேன்.
பெண்ணிற்கோ தவிப்பு அதை காணும் ஆண்களுக்கோ வியப்பு சீதனையின் மதிப்பு பெண்ணிற்கு பாரிய இழப்பு என்பதை அறியாத ஆண்களுக்கு இது ஒரு மானகெட்ட பிழைப்பு எனவே பெண்ணைப் பார்த்து உன்னை அவளுக்கு விற்பனை செய்யாதே !
கல்வி கற்று சிகரம் தொடும் கனவை காணும் பல ஏழை மாணவ, மாணவிகளின் கனவை நனவாக்க உதவிகளை செய்வதற்கு செல்வங்களில் மிதக்கும் செல்வந்தர்கள் தங்களின் உழைப்பில் ஒரு பங்கை இந்த ஏழைகளுக்கு வழங்கவேண்டும்.
முதுமையின் கொடுமை வாழ்க்கையில் வேதனை என்று வாழும் வயோதிப ஆண்கள், பெண்களை அன்பால் அரவணைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் உடலாலும், உள்ளதாலும், பொருளாலும், சொல்லாலும் செய்யவேண்டும்.