தினம் ஒரு தத்துவ பாட்டு - 37 = 212

“உயிரே உயிரே உனக்கு உறவுகள் பல நூறு – அதில்
உண்மையான உறவு எத்தனையென்று நீ கூறு…!”

வறுமையாளர் வாழ்விலே தினந்தோறும் சோகம்
வசதியாளர் வீட்டிலே பலவும் வேண்டி யாகம்…!

துன்பம் நேரும்போது தூற்றும் நம்சொந்தம்
இன்பம் நேரும்போது போற்றும் எங்கிருந்தும்

அனைத்தையும் அரவணைக்க அன்பு ஒன்றேப்போதும்
அன்பில்லாத நெஞ்சத்தில் வம்பு அலைமோதும்…!

கனமழை பெய்தாலே சாலையில் மழைநீர்த் தேங்கும்
தூர்வாரா வடிகாளால் சாலை குண்டும் குழியாய் மாறும்…!

ஆற்றுப்படுகையில் ஆக்கரமிப்புக்கு பஞ்சமில்லை
அரசியல் சதுரங்கத்தில் வெள்ளமென்பது வேடிக்கை பொம்மை..!

வேட்டி சேலை தந்து ஆறுதல் கூற வந்தோர்
வெள்ளத்தடுப்பு சுவரில் நின்று வேடிக்கை பார்க்கின்றார்..!

நிவாரணம் தருவது நெடுநாள் தீர்வாகாது
உதாரணம் ஆயிரமுண்டு உண்மை உறங்காது

தொலைநோக்கு பார்வையின்றி ஆட்சிகள் நடக்குது
பொறம்போக்கு நிலங்களையெல்லாம் கட்சிகள் சுருட்டுது

குடிசைகள் கோபுரமானால் கோயில்கள் தேவையில்லை
குடமுழக்கு என்றப்பெயரில் கோயில்களில் கூட்டுக்கொள்ளை

முட்டித்தள்ளும் வரிசையாலே பக்தனுக்கு வெறுத்துப்போச்சி
இருப்பினும் குட்டிக்குட்டி நம்பிக்கைதான் மனுசனுக்கு மனசாந்தி

தேர்தல் ஜுரத்திலே வேட்பாளன் தவிக்கிறான்
ஓட்டளித்த பயத்திலே வாக்காளன் முழிக்கிறான்

ஜனநாயக நாட்டிலே நடைப்பிணம்தான் நாமெல்லாம்
பணநாயக கூட்டணியில் பெருமுதலைகளின் ஆட்டமாம்

ஜாதி - மத மோதல்கள் ஜனநாயகத்தின் சகுனிகள்
ஜனத்திரள்கள் நிறைந்த நாட்டில் பலிகடாவாய் மனிதங்கள்.

எழுதியவர் : சாய்மாறன் (3-Sep-16, 7:48 pm)
பார்வை : 182

மேலே